ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், சரக்கு கப்பல் ஒன்று தரை தட்டி நின்றது.
ஒரிசாவிலிருந்து குஜராத் செல்ல வேண்டிய சரக்கு கப்பல் ஒன்று, நேற்று பாம்பன் பாலத்தை கடந்து சென்ற போது இரயில் தூக்குபாலம் அருகே கடலில் திடீரென ஏற்பட்ட நீரோட்டம் காரணமாக தரை தட்டி நின்றது. இதனையடுத்து மீனவர்களின் உதவியால் விசைபடகு மூலம் கப்பலை இழுக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப்பின் கடலுக்குள் கப்பல் இழுத்து வரப்பட்டு நிறுத்தப்பட்டது. எனினும் நீரோட்டத்தின் வேகம் காரணமாகவும் சூறாவளிகாற்று வீச உள்ளதாக வானிலை மையம் எசச்ரிக்கை விடுத்துள்ளதாலும், 23ஆம் தேதிக்குப்பின் கப்பல் குஜராத் செல்ல அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.