கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பூத்து குலுங்கும் காட்டு சூர்யகாந்தி பூக்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தற்போது காட்டு சூர்யகாந்தி பூக்களின் சீசன் துவங்கியுள்ளது. கோக்கால் பகுதியில் உள்ள மலைசரிவு முழுவதும் காட்டு சூர்யகாந்தி பூக்களாக காட்சி அளிக்கின்றது. பூத்து குலுங்கும் காட்டு சூர்யகாந்தி பூக்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக பார்த்து ரசித்து செல்வதோடு, புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.