தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு கல்வி தகுதியை அடிப்படையாக கொண்டு பெரும்பாலான மக்களால் எழுத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் வருகின்ற ஜீன் 9 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகிய விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 6,244 காலிப்பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் குரூப் 4 தேர்வுகள் வருகின்ற ஜீன்9 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது.
மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28 ஆம் தேதியே கடைசி நாள். மேலும் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பயனர்கள் இத்தேர்வில் தங்களது விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம்.
விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின், திருத்தம் செய்ய கடைசி நாள்: மார்ச் 04 , காலை 12.01 முதல் மார்ச் 06, இரவு 11.59 மணி வரை. 300 மதிப்பெண்கள் உள்ளடக்கிய 3 மணி நேரம் நடைபெற உள்ள இந்த தேர்வானது விஏஓ, இளநிலை உதவியாளர் என பல பதவிகள் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யவுள்ளது.