நியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்காலத்தடை

நியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்காலத்தடை
நியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்காலத்தடை
Published on

தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது

தமிழகத்தில் தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்வதற்கான ஆய்வகம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கடந்த 2011 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைக்கப்பட இருந்த இந்த ஆய்வகத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கின. 2.5 கி.மீ தூரத்துக்கு சுரங்கம் அமைத்து இந்த ஆய்வகம் அமைக்கப்பட இருந்தது.

இந்த ஆய்வகத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்பதால், ஆய்வகம் அமைக்கக் கூடாது என்று பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் இத்திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.
எனவே நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதில் சிக்கல் நீடித்தது. அனுமதியைப் பெற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. 

நியூட்ரினோ திட்டத்திற்கான புதிய அனுமதி கோரி Tata Institute of Fundamental Research நிறுவனம் சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக் குழுவிடம் விண்ணப்பித்திருந்தது. அப்போது, பல்வேறு ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மதிப்பீட்டுக் குழு கூறியது. 

அப்போது தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக் குழு பரிந்துரைத்தது. இந்திய நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை முழுமையாக ஏற்பதாகவும், நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு அபாயம் இருக்காது என்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு தெரிவித்தது. மேலும், இனி பொதுமக்கள் கருத்துகளை கேட்க வேண்டியதில்லை எனவும் சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக் குழு கூறியது. இந்நிலையில் தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில் நியூட்ரினோ திட்டத்தால் வன உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தேசிய வன உயிரின வாரியம் அனுமதி அளித்தால் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும் ஆய்வு மையம் அமைப்பதற்கான மத்திய அரசின் அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என்றும் மத்திய அரசு மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com