தமிழகத்தில் 2 கிரானைட் நிறுவனங்களுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தமிழகத்தில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுத்த குற்றத்திற்காக, 2 கிரானைட் நிறுவனங்களின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி முடக்கப்பட்ட மதுரை எம்.ஆர். கிரானைட்ஸ், ஆர்.ஆர். கிரானைட்ஸ் ஆகிய இரண்டு கிரானைட் நிறுவனங்களின் 517 அசையா சொத்துகளின் இன்றைய மதிப்பு ரூ.200 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அரசு புறம்போக்கு நிலங்களில் கிரானைட் வெட்டி எடுத்ததால், அரசுக்கு சுமார் 450 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின், பேரில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே காவல்துறையின் சார்பில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.