பெரம்பலூரில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இருவேறு வழக்குகளில் கைதிகளுக்குச் சாதகமாக பேசியதாக அரசு வழக்கறிஞர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்வரும் வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சுதா மைனர் பெண் என்பதால் அவரின் பெற்றோர்கள் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பான வழக்கு பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சித்ரா தேவி ஆஜரானார்.
இதனிடையே வழக்கறிஞரான சித்ரா தேவி, சுதா மற்றும் அவரது அம்மாவுடன் தொலைபேசியில் குமாருக்கு ஆதரவாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சுதாவின் பாட்டி பெரம்பலூர் அனைத்து பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இருவேறு வழக்குகளில் கைதிகளுக்குச் ஆதரவாகவும், அவரை காப்பாற்றும்படியும் சித்ரா தேவி பேசியது உறுதியானது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சாந்தா பரிந்தரையின் அடிப்படையில் சித்ரா தேவி அரசு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அப்பொறுப்பில் வழக்கறிஞர் வினோத் நியமியப்பட்டுள்ளார். அரசு வழக்கறிஞர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியினரின் பரிந்துரைப்படி நியமிக்கப்படுகின்றனர் என்பது குற்றச்சாட்டாகவே உள்ளது.