மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிய ஆளுநர்... விரைவில் கூடும் சட்டப்பேரவை! முழு விவரம்

பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி.
ஆளுநர் ரவி
ஆளுநர் ரவிpt web
Published on

ஒரு வாரத்திற்கு முன் ‘பல ஆண்டுகளாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்கள்’ குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மனுக்களை நீண்ட நாட்கள் வைத்திருக்க கூடாது என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி.

ஆளுநர் ரவி
12 மசோதாக்கள் நிறுத்திவைப்பு.. 5 முக்கிய குற்றச்சாட்டுகள்.. ஆளுநர் மீது வழக்கு தொடர்ந்த தமிழக அரசு!

அதன்படி பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசே நியமித்துக் கொள்வதற்கான மசோதாக்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை சில விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி.

இந்நிலையில் தமிழக அரசு மிக முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. மீண்டும் சிறப்பு மசோதாவைக் கூட்டி இந்த சட்ட மசோதாக்களை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்கள் என்னென்ன?
ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்கள் என்னென்ன?R N Ravi | TN Govt

நவம்பர் 19-ல் சிறப்பு சட்டமன்றம் கூடும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com