"ஏழுபேர் விடுதலையில் ஆளுநரின் நயவஞ்சகமான கருத்துகள் கண்டனத்துக்குரியது" - வேல்முருகன்

"ஏழுபேர் விடுதலையில் ஆளுநரின் நயவஞ்சகமான கருத்துகள் கண்டனத்துக்குரியது" - வேல்முருகன்
"ஏழுபேர் விடுதலையில் ஆளுநரின்  நயவஞ்சகமான கருத்துகள் கண்டனத்துக்குரியது" - வேல்முருகன்
Published on

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் கருத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தன்னை விடுதலை செய்ய வலியுறுத்தி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஒரு வார காலத்தில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில் 7 தமிழரை விடுவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே இருப்பதாக உள்துறை அமைச்சகம் வாயிலாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து தமிழர்களின் நெஞ்சில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது.

எழுவர் விடுதலைக்கான நேரம் கனிந்து வருவதாக தமிழர்கள் நம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில்,அதில் மண்ணள்ளிப் போடும் ஆளுநரின் இதுபோன்ற நயவஞ்சகமான கருத்துகள் கடும் கண்டனத்துக்குரியது.

எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் மீது இருந்த குறைந்தபட்ச நம்பிக்கையும் தமிழர்கள் இழந்துவிட்டார்கள் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com