“தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும் என எனக்கு ஆசை” - ஆளுநர் ஆர்.என்.ரவி

“பெண்கள் முன்னுக்கு வராமல் நாடு வளர்ச்சி அடையாது, வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன, யாரும் தேங்கிவிட வேண்டாம்” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி file
Published on

செய்தியாளர்: விக்னேஷ்முத்து.

‘தமிழ்நாடு இந்தி சாகித்திய அகாடமி’ மற்றும் டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி இணைந்து நடத்தும் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு மற்றும் பரிசளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில்...

“தமிழ் பழமையான மொழி, தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும். அதுவே எனது விருப்பமாகும். ஒரு நாள் அதுபோல பேசுவேன்” என தமிழில் பேசினார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிபுதிய தலைமுறை

தொடர்ந்து பேசுகையில், “தமிழ் இனிமையான மொழி, தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். கவுஹாத்தி பல்கலைக்கழகத்தில் தொடர்பு கொண்டுள்ளேன், தமிழ் பட்டய படிப்பை பல்கலையில் தொடங்க வேண்டுமென கேட்டுள்ளேன். கடந்த 3 ஆண்டுகளாக தமிழை கற்றுக் கொள்கிறேன். நான் தொடக்க நிலையில்தான் இருக்கின்றேன். தமிழ் செய்தித்தாள்களை படிக்கின்றேன், தமிழில் பேசினால் புரிகிறது. ஆனால், பேசுவது சிரமமாக உள்ளது. ஒரு நாள் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
தவெக மாநாடு.. காவல்துறையின் 21 கேள்விகள்.. கட்சி தரப்பில் வெளியான முக்கிய தகவல்

என் காது கேட்கும் தூரத்தில் யாராவது தமிழில் பேசினால் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சுதந்திரத்திற்கு பின்பாக நாம் போதுமானதை செய்யவில்லை. சுதந்திரத்தின்போது இந்தியா 6-வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. அதை தொடர்ந்து 60 ஆண்டுகளில் 11-வது இடத்திற்கு வந்துவிட்டோம். 65 ஆண்டுகளாக பின்னோக்கி சென்று விட்டோம். நமது நாட்டின் பலம் தவிர்க்கப்பட்டது. நாம் வறுமை ஒழிப்பு குறித்து பேசினோம். கல்வியை பரப்பினோம். ஆனால், இன்னும் படிக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள்.

பெண்கள் முன்னேற்றம்
பெண்கள் முன்னேற்றம்pt desk

உலகம் மாறி வருகிறது, 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது நாட்டை பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. பொருளாதாரத்தையும், நிர்வாகத்தையும் எப்படி சரி வேண்டும் என்று பலரும் நமக்கு பாடம் எடுத்தார்கள். ஆனால், இன்று உலகம் நம்மை பார்க்கிறது. உலகத்தின் மிக முக்கியமான முடிவுகளில் இந்தியாவின் பங்கு முக்கியமாக உள்ளது. உலகின் வேகமாக வளர்ந்துவரக் கூடிய பொருளாதாரம் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கின்றது. இந்தியா 7 சதவீதம் வளர்ந்து இருக்கின்றது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஹரியானா | காரில் பசு கடத்துவதாக வந்த தகவல்.. 12ஆம் வகுப்பு மாணவரை சுட்டுக் கொன்ற கும்பல்!

முன்பு 300 - 400 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்த இடத்தில், இன்று 1,25,000 புத்தாக்க நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் 20% நிறுவனங்கள் யூனிகான் நிறுவனங்கள். கடந்த 10 ஆண்டுகளால் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின் பின்பு ராணுவ பலம் மற்றும் வளங்களைக் கொண்டு நாடுகள் வளர்ச்சியடைந்தது. ரஷ்யா மற்றும் உக்ரைனில் மட்டும் போர் நடைபெறவில்லை. சிறு சிறு போர்கள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று உலகம் அச்சத்தில் வாழ்கின்றது, அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. பூமியே வெப்பமயமாதலால் பாதிக்கப்பட்டுள்ளது. பல மில்லியன் மக்கள் இன்றும் உலகில் வெறும் வயிற்றுடன் உறங்கச் செல்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் ஹமாஸ் போர்pt web

கடந்த ஆண்டு ஜி20 நாடுகள் கூட்டத்தை நாம் தலைமை தாங்கினோம். 85 சதவீத உலக ஜிடிபி வைத்திருக்கக் கூடிய இந்த நாடுகள் பட்டியலில் மிகப்பெரிய அளவிலாக உள்ள ஆப்பிரிக்க கண்டமே இடம்பெறவில்லை. நாம்தான் ஆப்பிரிக்காவை ஜி-20 அமைப்பிற்குள் கொண்டு வந்தோம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
The GOAT படத்தில் அஜித், SK, விஜயகாந்த்? முக்கிய வில்லன் மோகன் இல்லை? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்...!

எப்படி இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே குடும்பம். அனைத்து உயிரினங்களும் ஒன்று. இந்த ஒருங்கிணைந்த தத்துவமே ஒருங்கிணைந்த பார்வையே நம் பாரதத்தின் பாரம்பரியம். ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வோம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லித் தந்தனர். ஆனால், அதை நாம் வெளியே கொண்டு செல்லவில்லை. ராணுவ பலம், ஆன்மிக பலம் அனைத்தும் மூலமாக வெளியே கொண்டு செல்ல வேண்டும். மாணவர்கள் பல்வேறு துறைகளை தேர்வு செய்திருக்கலாம் உங்களுக்காக உங்கள் குடும்பத்திற்காக மட்டுமல்லாமல் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் பாடுபடுங்கள், உங்கள் துறையில் சிறந்து விளங்குகள். இதுவே நேரம். சரியான நேரம்.

National flag
National flagpt desk

பெண்கள் முன்னுக்கு வராமல் நாடு வளர்ச்சி அடையாது, வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன, யாரும் தேங்கிவிட வேண்டாம். முன்னேறிச் செல்லுங்கள். 2047 இந்த நாட்டுக்காக என்ன செய்தேன் என்று யோசித்துப் பாருங்கள். எதிர்மறை எண்ணங்கள் வருவதை தவிருங்கள், பலர் மொழிகளாலும், மதங்களாலும் பிரிவினை உண்டாக்குவார்கள். நாம் அதில் பாதிக்கப்படக் கூடாது. அந்த எதிர்மறை எண்ணங்களை எதிராக போராட வேண்டும். வாழ்க தமிழ், வாழ்க இந்தி, வாழ்க பாரதம்” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com