தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்|முதல்வரின் பதிவு.. நீண்ட விளக்கத்துடன் எதிர்வினை ஆற்றிய ஆளுநர் ரவி!

தமிழ்த்தாயின் வாழ்த்து விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
mk stalin, rn ravi
mk stalin, rn ravix page
Published on

'டிடி தமிழ்' சார்பில் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாட்டம் இன்று (அக்.18) கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசினார். முன்னதாக, இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, தமிழ்த்தாயின் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள ’தெக்கணும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விடப்பட்டு பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாகச் சாடியிருந்தார். அத்துடன் அவரை, மத்திய திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுறுத்தார். இதற்கிடையே, அந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது. மேலும் டிடி தமிழ் தொலைக்காட்சி நிறுவனமும் மன்னிப்பு கேட்டிருந்தது. என்றாலும், இவ்விவகாரம் தொடர்ந்து விவாதத்தை எழுப்பி வருகிறது.

இதையும் படிக்க: உக்ரைன் போர்|’ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய 12,000 வடகொரிய ராணுவ வீரர்கள்’- தென்கொரியா குற்றச்சாட்டு

mk stalin, rn ravi
டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி திணிப்பு| தலைவர்கள் கண்டனம்.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக்கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாகப் பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர்மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும்கூட தமிழைக் கொண்டுசென்றார்" என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இஸ்ரேல் - காஸா போர்| ”முடிவுக்கு வர ஹமாஸ் இதைச் செய்ய வேண்டும்” - பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தல்!

mk stalin, rn ravi
தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ வரி புறக்கணிப்பு| டிடி தமிழ் விழாவுக்கு கடும் கண்டனம்

மேலும் அதில், “ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளைச் செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வடகிழக்கு மாநிலத்தில் தமிழைப் பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

தனது இனவாத கருத்துகள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொதுவெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

ஓர் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. தனது இனவாத கருத்துகள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொதுவெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”நாம் பேசலாமா?”- பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்ற லாரன்ஸ் பிஷ்னோய்க்கு அழைப்புவிடுத்த பிரபல நடிகை!

mk stalin, rn ravi
தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ வரி புறக்கணிப்பு | மன்னிப்பு கேட்டது டிடி தமிழ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com