தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
மீட்புப்பணிகளில் பேரிடர் மீட்புப்படையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மழை பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து முக்கியமான துறை அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று நண்பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். இன்று காசி தமிழ்ச்சங்கமத்தில் ஆளுநர் பங்கேற்க இருந்த நிலையில் தற்போது அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.