திருநெல்வேலியை சேர்ந்த அப்துல்வஹாபுதீன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.
18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. கொரோனா நோய் தொற்றின் 3-வது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படும் சூழலில், சில பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக நேரடி வகுப்பிற்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். மேலும் சில பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவது இல்லை.