இந்து அறநிலையத் துறையில் சமூக நீதியை நிலைநாட்டும் விதத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் தகுதியான பயிற்சி பெற்றவரை அர்ச்சகர்களாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி நிலையங்களும், சென்னை, ஸ்ரீரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி இடங்களும் ஏற்படுத்தப்பட்டு அர்ச்சகராக பயிற்சி அளிக்கப்படுவதாக இந்து அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம்தேதி 56 அர்ச்சகர்களுக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கிய நிலையில் இவர்களில் 22 பேர் பயிற்சி நிலையங்களில் பயிற்சி நிறைவு செய்தவர்கள் என்றும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.