தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளராக கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளராக சுப்ரியா சாகு நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக காகர்லா உஷா நியமித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளராக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக ஹிதேஷ் குமார் நியமனம்.
வேளாண் உற்பத்தி ஆணையர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செயலாளராக சமயமூர்த்தி நியமனம்.
இப்படி 21 துறைக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.