அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
Published on

போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்பெறப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன், 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக தொமுச, சிஐடியூ, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

ஏற்கெனவே தொழிலாளர் நல ஆணையம் முன்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. எனவே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் தொழிற்சங்கத்தினரை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது. அதன்படி, இன்று தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் இடையே பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்ற நிலையில் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட போக்குவரத்து தொழிலாளர்கள் முடிவுசெய்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ரூ.1000 தற்காலிக நிவாரணமாக அளிக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், 3 நாட்கள் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் அரசாங்கம் தொழிலாளர்மீது எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாது என்று உத்தரவாதம் அளித்திருப்பதாகவும், வேலைநிறுத்தம் நடைபெற்ற நாட்களுக்கு சம்பள பிடித்தம் இருக்காது என்றும் அரசாங்கம் கூறியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F248393673433824%2F&show_text=false&width=560" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com