மதுரை | அரசு பேருந்தா? மாநகராட்சி கொசு மருந்து வண்டியா? – வைரலான வீடியோ.. பின்னணி இதுதான்!

மதுரையில் அதிகளவு புகையை கக்கியபடி சென்ற அரசு பேருந்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அரசு பேருந்தா? கொசு மருந்து வண்டியா?
அரசு பேருந்தா? கொசு மருந்து வண்டியா?pt desk
Published on

மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1000க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவ்வப்போது பராமரிப்பில்லாத வித்தியாசமான அரசு பேருந்துகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சென்ற அரசு பேருந்து அதிகளவு வெள்ளைப் புகையை வெளியேற்றியபடி சென்றதை சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

அரசு பேருந்தா? கொசு மருந்து வண்டியா?
அரசு பேருந்தா? கொசு மருந்து வண்டியா?pt desk
அரசு பேருந்தா? கொசு மருந்து வண்டியா?
”தனிமை என்னும் பெருஞ்சுமை” - ஆய்வு கட்டுரை குறித்து விளக்குகிறார் மனநல ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணா!

மாநகராட்சியில் கொசு மருந்து அடிப்பது போல அரசு பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பேருந்தில் இன்ஜின் பிரச்னை இருந்த நிலையில், சரி செய்வற்காக பேருந்தை பணிமனைக்கு எடுத்துச் சென்ற போது சிலர் அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர் என்று விளக்கம் அளித்தனர்.

இருப்பினும் இந்த வீடியோ பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com