செய்தியாளர்: பிரசன்னா
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் வழியாக சென்ற அரசு பேருந்து பசுமலை அருகே மூலக்கரை சாலையில் செல்லும் பொழுது தாழ்வாக சென்ற மின்சார வயரில் சிக்கிக் கொண்டது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் மிக குறைவாகவே இருந்தனர். இதனால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சாலையை சுமார் ஒன்றரை அடி வரை உயர்த்தி சமீபத்தில் பயன்பாட்டு கொண்டுவரப்பட்டதனால் மின்சார வயர் தற்போது தாழ்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாலையை உயர்த்தும் பொழுது மின்சார வயிறையும் மேலே உயர்த்த வேண்டும். அவ்வாறு செய்யாததால் தற்பொழுது இந்த விபத்து நடைபெற்று உள்ளது.
தகவல் அறிந்த மின்சார துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து அறுந்து விழுந்த மின்சார வயரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். அதன் பின்பு மின் இணைப்பை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன் கோத்தகிரி அருகே அரசு பேருந்தின் மீது மின்சார கம்பி உரசியதால் அரசு பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.