மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு....குட் நியூஸ்!

மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டை சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு பணிமாறுதல் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெண் காவலர்கள்
பெண் காவலர்கள்Facebook
Published on

மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டை சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு பணிமாறுதல் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெண் காவலர்கள்
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை விவகாரம்|தந்தை மகன் அடுத்தடுத்து இறப்பு; மரணத்தில் எழும் சந்தேகங்கள்!

காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். மொத்தமாக 158 மத்திய அரசு பதக்கங்கள், 301 முதலமைச்சர் பதக்கங்கள் என மொத்தம் 459 பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது என கூறினார். பணிக்கு திரும்புபோது குழந்தைகளை பராமரிப்பதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கணவர் வீட்டை சார்ந்தவர்கள் வசிக்கும் மாவட்டத்திற்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணி மாறுதல் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com