வட இந்தியர்கள் சென்னையை நோக்கி பயணிப்பது ஏன்? கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் “மருத்துவமனை எக்ஸ்பிரஸ் ?”

வட இந்தியர்கள் சென்னையை நோக்கி வருவதற்கு காரணம் மருத்துவ சிகிச்சைக்கு தான். சென்னையில் பல தனியார் மருத்துவமனைகள் அதிநவீனமான உயர்சிகிச்சை அளிப்பதால் வடமாநிலத்தினர் சென்னையை விரும்புகின்றனர்.
மருத்துவமனை
மருத்துவமனைPT
Published on

கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் பலியாகியிருந்த சம்பவம், வரலாற்றில் அழிக்கமுடியாத ஒரு வடு. விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த அநேகம் பேர் வங்காளத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. இவர்கள் ஏன் சென்னை வந்தனர், வந்ததன் நோக்கம் என்ன என்பது குறித்து ஒருசிலரை கேட்டறிந்த டைம்ஸ் ஆப் இந்தியா இணையம் அவர்களின் பேட்டியை வெளியிட்டுள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர், இவா பானர்ஜி. இவரது கணவர் சுரோடோ. இவர்கள் இருவரும் கொல்கத்தாவிலிருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸில் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்துள்ளார்கள். இன்று நேற்று அல்ல... கடந்த பத்து வருடங்களாக இதே கோரமண்டல் எக்ஸ்பிரஸில் இவர்கள் பயணம் செய்து வருகிறார்களாம். இதற்கு காரணம் மருத்துவம் என்கின்றனர். ஆம்... சென்னையில் மருத்துவ வசதி நன்றாக உள்ளதால் இங்கு வந்து தங்கி சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்கள்.

Train Accident
Train AccidentTwitter

சுரோடோ, வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் (AMD) நோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஒவ்வொரு முறையும் தனது சிகிச்சைக்காக கொல்கத்தாவிலிருந்து சென்னையில் இருக்கும் சங்கரநேத்ராவில் சிகிச்சைக்காக வந்துகொண்டிருக்கிறாராம். இதில் இந்த முறை இவரது பயணம் மிகவும் மோசமானதாக இருந்திருக்கிறது. நல்லவேளையாக உயிர் சேதம் ஏதும் இன்றி காயங்களுடன் தப்பியிருக்கிறார்.

இவர்களைப்போல் பலர், மேற்கு வங்கம் ஒடிசா போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னையை நோக்கி வருவதற்கு இங்கிருக்கும் உயர்தர மருத்துவமனைகள் தான் காரணம். இவர்கள் கோரமாண்டல் எக்ஸ்பிரஸ்ஸை “மருத்துவமனை எக்ஸ்பிரஸ்” என்கிறார்கள்.

அடுத்ததாக புருலியாவில் வசிக்கும் சந்தனா கோஷ் மற்றும் அவரது மனைவி சுப்ரதா. இவர்கள், தங்களின் ஏழு வயது மகன் சயனை வேலூரில் இருக்கும் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். இதில் இவர்கள் பயணித்த பெட்டியானது விபத்துக்குள்ளானதில் சுப்ரதாவும், சயனும் மிக மோசமாக காயமடைந்துள்ளனர். அதற்கு தற்போது சிகிச்சையும் பெற்று வருகிறார்கள். இவ்விபத்தில் சயனின் முதுகெலும்பில் பல முறிவுகளும், கால்களும் முட்டியும் படுகாயமடைந்துள்ளன என்கிறார்கள்.

இவர்களைப்போல் பல எண்ணற்றவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக தினமும் சென்னை வந்துகொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com