ஆபரண தங்கம் ஒரு மாதத்தில் இவ்வளவு விலை குறைவா..! இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு மாதத்தில் சவரனுக்கு 2,160 ரூபாய் விலை குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 66 ரூபாய் விலை குறைந்து 5,290 ரூபாய்க்கும், ஒரு சவரன் 528 ரூபாய் விலை இறங்கி 42,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 2ரூபாய் விலை குறைந்து 73 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.

செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி தங்கம் ஒரு சவரன் 44,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. செப்டம்பர் 15ஆம் தேதி ஒரு சவரன் 44,000 ரூபாய்க்கும், செப்டம்பர் 29ஆம் தேதி 43,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அடுத்து வந்த 30ஆம் தேதி ஒரு சவரன் 42,880 ரூபாயாக விலை குறைந்தது.

இந்நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி தங்கம் ஒரு சவரன் 42,848 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 3ஆம் தேதியான இன்று 42,320 ரூபாயாக விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை குறைவுக்கு என்ன காரணம்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்கும் மேல் வர்த்தகமாவது, அமெரிக்க கடன் பத்திரங்களின் விலை தொடர் ஏற்றத்தில் இருப்பது, டாலர் மதிப்பு வலுவாக இருப்பது மட்டுமல்லாமல் அங்கு பிஎம்ஐ எனப்படும் உற்பத்தி குறியீடு சந்தை எதிர்பார்ப்பை விட அதிகமாக வந்துள்ளதும் தங்கம் விலை குறைய காரணமாகக் கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com