கடலூர் மாவட்டம் வேப்பூரில், ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி, 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகியுள்ளன.
திருச்சி, சென்னை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆடுகளை வாங்குவதற்காக, வியாபாரிகள் குவிந்திருந்தனர். ஒரு ஆட்டின் விலை 7 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ஐந்து மணி நேரத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையானதால், ஆடுகளை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்தனர். இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், நேற்று இரவே ஆடுகளை வாங்க சந்தையில் குவிந்தனர். இதனிடையே ஆட்டுச் சந்தையில், 7க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. இது குறித்து கால்நடை மருத்துவர்கள் ஆய்வுசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.