திருப்பூர்: திடீரென அறுந்த கயிறு.. கிணற்றில் தவறிவிழுந்த ஆட்டை மீட்கச் சென்று உயிரைவிட்ட உரிமையாளர்!

திருப்பூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்கச்சென்ற உரிமையாளர், அதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த உரிமையாளர்
உயிரிழந்த உரிமையாளர்புதியதலைமுறை
Published on

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பணக்காரன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. எலக்ட்ரிஷன் ஆக வேலை செய்து வந்த இவர், தனது வீட்டில் சுமார் 20 ஆடுகளை வளர்த்து வந்தார். இதற்கிடையே, தினமும் காலை நேரத்தில் சிறிது நேரம், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் பாலாஜி. இந்த நிலையில், அதே பகுதியில் வழக்கம்போல காலை நேரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக பிடித்து செல்லும்பொழுது, ஒரு ஆடு மட்டும் விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

இதனை அறியாமல் பாலாஜியும் சிறிது தூரம் சென்றுள்ளார். பின்னர் சில நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டை எண்ணி பார்த்துள்ளார். அப்போது ஒரு ஆடு இல்லாமல் இருந்ததை அறிந்து கிணற்றை வந்து பார்த்தபோது, ஆடு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளது. தொடர்ந்து, ஆட்டை மீட்க நினைத்த பாலாஜி உடனடியாக கயிற்றைக் கட்டி கிணற்றில் இறங்க முற்பட்டுள்ளார்.

உயிரிழந்த உரிமையாளர்
ஒரு மாதமே அவகாசம்.. தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகிவிட்டதா? - என்ன சொல்கிறார் ஜெயக்குமார்!

அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்ததில், பாலாஜி கிணற்றில் உள்ள கல்லின் மீது விழுந்தார். இதில் அவரது தலை கல்லின் மீது மோதி பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதனை, அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பாலாஜியின் உடலை மீட்டு நாட்றம்பள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நாட்றம்பள்ளி போலீசாரும் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் விழுந்த ஆட்டின் உயிரை மீட்க சென்ற வாலிபர், அதே கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த உரிமையாளர்
”விஜய் கட்சியால் திமுகவுக்குதான் பிரச்னை; எங்களுக்கு ரூட்டு க்ளியர்”-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com