நூற்றாண்டு பெருமை பேசும் பொறையாறு இஞ்சி பக்கோடா

நூற்றாண்டு பெருமை பேசும் பொறையாறு இஞ்சி பக்கோடா
நூற்றாண்டு பெருமை பேசும் பொறையாறு இஞ்சி பக்கோடா
Published on

100 ஆண்டுகளைக் கடந்தும் பாரம்பரிய மு‌றையில் தயாரிக்கப்படும் பொறையாறு இஞ்சி பக்கோடா பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. 

நாவின் சுவை நரம்புகளை தூண்டும் உணவு வகைகளுக்கான வரவேற்பு எந்த இடத்திலும் மாறாத ஒன்று. அந்த வகையில், நாகை பொறையாறு இஞ்சி பக்கோடாவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு நிலவி வருகிறது. அப்படி என்ன இருக்கிறது இந்த இஞ்சி பக்கோடாவில்? 

நாகையை அடுத்த பொறையாறு பகுதிகளில் விழாக்களிலும், விருந்து உபசரிப்பிலும் முக்கிய இடம் வகிப்பது இஞ்சி பக்கோடா. இஞ்சி, பூண்டு, சோம்பு, கிராம்பு, பட்டை லவங்கத்தை உரலில் இடித்து, கடலை மாவு, அரிசி மாவு, வறுத்து இடித்த மிளகாய் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து இந்தப் பக்கோடா தயாரிக்கப்படுகிறது. ஒருமுறை பொரித்த பக்கோடாவை மறுமுறை பொரித்தால்தான் மொறுமொறுப்பு கிடைக்கிறது என்கிறார்கள் சமையல் கலைஞர்கள்.

குவைத், மஸ்கட், சவுதி உள்ளிட்ட அரபு நாடுகள் மட்டுமின்றி ரஷ்யா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா என 35கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது இந்த பொறையாறு இஞ்சி பக்கோடா. இதன் தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் விலை உயர்ந்தாலும் லாப நோக்கமின்றி 100 ஆண்டுகள் பாரம்பரியத்தை காப்பாற்ற தொடர்ந்து இஞ்சி பக்கோடா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தயாரிப்பவர்கள் கூறுகிறார்கள்.


மேலும் நாவில் கரைந்து பொறையாறு பெருமை பேசும் சுவையான இஞ்சி பக்கோடாவை மக்கள் ஆர்வமுடன் வாங்கி விரும்பி சாப்பிடுகிறார்கள்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com