பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக கவர்னர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தாமதித்தால் கெட்அவுட் கவர்னர் என்ற முழக்கத்தோடு தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து ஜனநாய சக்திகளும் ஒன்று சேரக்கூடிய சூழல் ஏற்படும், இதை தவிர்க்க முடியாது என தமீமுன் அன்சாரி எம்எல்.ஏ பேட்டியளித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது...
உச்சநீதிமன்றம் அளித்த கருத்தின்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கும், பன்நோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கைக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி இருக்கிறது. அதனால் தமிழக கவர்னர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
கவர்னர் தாமதித்தால் உடனடியாக தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளையும் கவனத்தில் கொண்டு தமிழக முதல்வர் அமைச்சர்கள் கொண்ட குழுவை கூட்டி ஆணை பிறப்பிக்க ஆவண செய்ய வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் உரிய தண்டணை காலத்தை விட அதிமாக தண்டனையை பெற்றுள்ளனர்.
இனியும் தாமதித்தால் கெட்அவுட் கவர்னர் என்ற முழக்கத்தோடு தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து ஜனநாய சக்திகளும் ஒன்று சேரக்கூடிய சூழல் ஏற்படும். இதை தவிர்க்க முடியாது. மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.