நாற்று நட்ட வயலுக்குள் இறக்கப்பட்ட பொக்லைன்: கதறும் விவசாயிகள் - வீடியோ!

நாற்று நட்ட வயலுக்குள் இறக்கப்பட்ட பொக்லைன்: கதறும் விவசாயிகள் - வீடியோ!
நாற்று நட்ட வயலுக்குள் இறக்கப்பட்ட பொக்லைன்: கதறும் விவசாயிகள் - வீடியோ!
Published on

கெய்ல் நிறுவனம் விவசாயத்தை அழித்து எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்வதாக மயிலாடுதுறை பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்‌ளனர். 

நாகை மாவட்டம் மாதானம் முதல் மேமாத்தூரை வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதித்து எரிவாயு எடுத்துச் செல்ல கெய்ல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, முடுகண்டநல்லூர் கிராமத்தில், குறுவை நடவு செய்த வயலில் குழாய் பதிப்பதற்காக பொக்லைன் இயந்திரத்தை கொண்டு சென்றுள்ளனர்.

இதனை அறிந்த விவசாயிகள், விவசாய நிலத்தில் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டு போராட்டம்‌ ‌நடத்தினர். இதனால் அங்கு பள்ளம் தோண்டாமல் பொக்லைன் இயந்திரத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் கெய்ல் குழாய் பதிப்பதற்காக நடவு செய்த வயலில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கியவர்களுடன் விவசாயிகள் முறையிடும் காட்சி வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், ''நாற்று நட்ட வயல் பச்சபுள்ள மாதிரி சார்'' என்று விவசாயி கூறுவது காண்போரை கண் கலங்கச் செய்கிறது. அந்த வீடியோவை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com