”இன்னும் மர்மமாகவே இருக்கு” வாயு கசிவால் மூடப்பட்ட பள்ளிக்கூடம் திறப்பு ; கொந்தளிக்கும் பெற்றோர்கள்!

வாயு கசிவு புகாரால் மூடப்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோர்களிடம் ஆலோசிக்கப்பட்ட நிலையில் உரிய விளக்கம் அளிக்கவில்லை என தெரிவித்து பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாயு கசிவு
வாயு கசிவுபுதிய தலைமுறை
Published on

செய்தியாளர்:விக்னேஷ் முத்து

வாயு கசிவு புகாரால் மூடப்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோர்களிடம் ஆலோசிக்கப்பட்ட நிலையில் உரிய விளக்கம் அளிக்கவில்லை என தெரிவித்து பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர் கிராமத்தெருவில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 42 மாணாக்கர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டபோதும் 9 மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி சுகாதாரக்குழு பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மொபைல் வாகனம் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 20 நாட்களுக்குப்பிறகு பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி திறக்கப்பட்ட நிலையில், காலை 10 மணி அளவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஆலோசனைக்கூட்டத்தில் பள்ளி முதல்வர் வனிதா, மாவட்டக் கல்வி அலுவலர் முருகன் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கு விளக்கம் அளித்தனர். கூட்டம் முடிந்த நிலையில் எதற்காக மாணவர்கள் மயங்கி விழுந்தார்கள் என்பதற்கான விளக்கம் இல்லை என தெரிவித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மீண்டும் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. படிக்க வரும் மாணவர்களின் நலனில் பள்ளி கவனம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர் கூறினர். பள்ளிக்கு வரும் மாணவர்களின் படிப்புடன் சேர்த்து, அவர்களின் உடல்நிலையிலும் கவனம் செலுத்தப்படும் என்று பள்ளி முதல்வர் வனிதா தெரிவித்தார்.

வாயு கசிவு
"அவர்களுக்கு உயிர் என்றால்... எங்களுக்கு இல்லையா? அந்த ஊசிதான்.."- விக்னேஷின் உறவினர்கள் சொல்வதென்ன?

பிரச்னைக்கான காரணம் சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறிய மாவட்டக் கல்வி அலுவலர் முருகன், மாசுக்கட்டுப்பாட்டு வாகனத்தில் 5 விஞ்ஞானிகள் இருப்பதாகவும், பெற்றோர் பயமின்றி வீடு திரும்பலாம் என்றும் தெரிவித்தார். வாயு கசிவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com