தமிழ்நாடு
கொரோனா பரவல் : “தமிழ்நாட்டு மக்கள் கவலைப்பட வேண்டாம்” - ககன்தீப் சிங் பேடி
கேரளாவில் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் அதுகுறித்து தமிழ்நாடு மக்கள் கவலைப்படத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த ராமாபுரம் எஸ்.ஆர்.எம். பல் மருத்துவ கல்லூரியில், செயற்கை பல் மருத்துவம், ஈறு அறுவை சிகிச்சை மற்றும் வேர் சிகிச்சை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, டெல்லி, கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பல் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
பல் மருத்துவ நிபுணர்கள் மாணவர்களுக்கு சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைத்தனர். முன்னதாக இந்த கருத்தரங்கை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கேரளாவில் கொரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இருப்பினும் அதுபற்றி தமிழ்நாடு மக்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்” என்றார்.