மதுவிலக்கு
மதுவிலக்குகோப்புப்படம்

மதுவிலக்குக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதி என்ன செய்யப்படுகிறது?

மக்கள் மது பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காகவும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தமிழகத்தில் மதுவிலக்கு துறை சார்பாக ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. அது என்ன செய்யப்படுகிறது என்று பார்க்கலாம்.
Published on

செய்தியாளர்: ரமேஷ்

2023-24 நிதி ஆண்டில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுக்காக 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொகை கடந்த 2024 ஏப்ரல் மாதத்துடன் முழுவதும் செலவழிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

மது
மது

அதன்படி, மதுவிலக்கு எஸ்.பி-க்கு 15 லட்சம் ரூபாயும், ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 38 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மூலம் நாட்டுப்புற கலைஞர்களைக் கொண்டு மதுவின் தீமைகள் குறித்து நாடகங்கள் மூலமும், டிஜிட்டல் திரைகள் மூலம் விளக்கியும் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக அடிக்கடி கள்ளச்சாராய விபத்துக்கள் நடைபெறும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் நடத்தப்படுவதாகவும் மதுவிலக்கு துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

மதுவிலக்கு
கள்ளக்குறிச்சி| கண்ணீர் ஊர்வலம்.. மழையை பொழிந்த வானம்! விஷச்சாராயத்தால் இறந்தவர்களின் உடல்கள் தகனம்!

இந்த நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? இதற்கு கிடைத்த பலன் என்ன? என்பதை அரசுதான் விளக்க வேண்டும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com