பெரம்பலூரில் முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு!

பெரம்பலூரில் முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு!
பெரம்பலூரில் முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு!
Published on

தமிழகத்தை பொருத்தவரை 1,937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மட்டும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் அறிவித்த சில பகுதிகளில் மட்டும் முழு பொது முடக்கம் தொடர்ந்து வருகிறது. மற்றபகுதிகளில் வழக்கமான பொதுமுடக்கமும் அமலில் உள்ளன. 

இந்நிலையில் பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த முழு பொது முடக்கம் மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பெரம்பலூர் நகரம் மற்றும் அதனைச் சுற்றி 8கிமீ அளவுக்கு முழு பொதுமுடக்கம் இன்று வரை அமல்படுத்தப்பட்டது. அந்த முழு பொதுமுடக்கம் தற்போது மறு உத்தரவு வரும்வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உழவர்சந்தை, காய்கறி மார்க்கெட், இறைச்சிக் கடைகள் ஆகியவை திறக்க தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட் திறக்கத் தடை என்றும் டோர் டெலிவரி செய்ய அனுமதி எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி சார்பில் 54 வாகனங்களில் காய்கறி விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறிய மளிகைக் கடைகள் மட்டும் மதியம் 1 மணிவரை திறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com