முழு ஊரடங்கு: ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கும் திட்டம் விழுப்புரத்தில் தொடக்கம்

முழு ஊரடங்கு: ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கும் திட்டம் விழுப்புரத்தில் தொடக்கம்
முழு ஊரடங்கு: ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கும் திட்டம் விழுப்புரத்தில் தொடக்கம்
Published on

கொரோனா பொது முடக்கம் இருக்கும் வரை ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கியுள்ளார்.

விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலம் எதிரில் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியின் கீழ் ' சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. லட்சுமணன் ஏற்பாட்டில் 'அன்பு சுவர்' அமைக்கப்பட்டு கொரோனா காலத்தில் ஏழை எளியோருக்கு உணவு வழங்கும் பணியை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.

தமிழக அரசு பொது முடக்கத்தை அறிவித்துள்ளதால் மக்கள் உணவிற்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை களைய விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வளவனூர், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை இங்கு உணவு வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com