பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் செயல்பட அனுமதி - தமிழக அரசு

பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் செயல்பட அனுமதி - தமிழக அரசு
பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் செயல்பட அனுமதி - தமிழக அரசு
Published on

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் கொரோனா விதிகளை பின்பற்றி பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் இயங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் "காய்கறி,மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியை போன்று அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரம் மேற்கொள்ளலாம். ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியை போன்று, அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம்.

தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் செயலாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு உதவ 24 மணி நேரமும் செயல்படும் சேவை மையம் அமைக்கப்படும். சென்னையில் உள்ள தொழில்வழிகாட்டி மைய அலுவலகத்தில் இந்த சேவை மையம் இயங்கும் என்றும் 9877107722, 9994339191, 9962993496 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com