சென்னை: மக்கள் நெரிசலின்றி பயணம் செய்ய இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்!

சென்னை: மக்கள் நெரிசலின்றி பயணம் செய்ய இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்!
சென்னை: மக்கள் நெரிசலின்றி பயணம் செய்ய இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்!
Published on

பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பயணம் செய்ய ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மாநகரப் பேருந்துகளில் சிரமமின்றி பயணம் செய்திட ஏதுவாக, இன்று முதல் 300 முதல் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், செம்மஞ்சசேரி, மணலி, கண்ணகி நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com