ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
6 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் ரூ.5 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் சிக்கியது.
காட்பாடியில் தனியார் உணவகத்தில் நள்ளிரவில் நடந்த திடீர் சோதனையில் 18 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். மதுரை மற்றும் நாகர்கோவிலில் இன்று நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.
திமுகவில் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்
அதிமுக ஆட்சியில் சாதனைகள் ஏதும் இல்லாததால் திமுக மீது அவதூறு பரப்புவதாக மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தன்னுடைய திட்டத்தையே அதிமுக, திமுக நகல் எடுத்து அவசரத்திற்கு அறிவித்து வருகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
பணத்தை நம்பியே அதிமுக தேர்தலில் போட்டியிடுகிறது என கடையநல்லூரில் பரப்புரை மேற்கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
ஆட்சிக்கு வந்தால் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதி
நடத்தை விதிகளை மீறியதாக திமுக எம்பி ஆ.ராசா பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் 48 மணி நேரத் தடை விதித்த நிலையில், தடையை எதிர்த்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற ஆ.ராசா தரப்பின் முறையீட்டை உயர்நீதிமன்றம் மறுத்தது.
கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாதா சாகேப் பால்கே விருது அறிவித்த மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட தேர்தலில் மேற்குவங்கத்தில் 82 சதவிகிதமும், அசாமில் 77 சதவிகிதமும் வாக்குப்பதிவாகிய்ள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 800ஐ தாண்டியது.
சென்னை, வேலூர், திருச்சி, தருமபுரி உள்ளிட்ட 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது வெயில் அடித்தது. தமிழகத்தில் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.