இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான அனைத்து மக்களின் டிஎன்ஏவும் ஒன்றுதான் என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
விராத் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில் சுப்ரமணியன் சுவாமியின் 80வது பிறந்தநாள் விழா மற்றும் பாராட்டு விழா மதுரை வர்த்தக மைய கட்டிடத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய சுப்ரமணியன் சுவாமி, "டிஎன்ஏ சோதனை கண்டுபிடிப்பு மூலமாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான அனைத்து மக்களின் டிஎன்ஏவும் ஒன்றேதான். இதனை அனவரும் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழக பாடப்புத்தகத்தில் விரைவில் இடம்பெறும், பாஜக ஆட்சியில் இதனை நிறைவேற்ற முயற்சிக்கிறோம்" என்றார்
மேலும் தொடர்ந்த சுப்ரமணியன் சுவாமி "அம்பேத்கர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க நேரு விரும்பவில்லை, அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது பாஜக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது, நேரு பண்டிதர் அல்ல, அம்பேத்கர் தான் பண்டிதர், முத்துராமலிங்கத் தேவர் சொன்ன தேசியமும் தெய்வீகமும் தான் நமது கொள்கை. நமது நாட்டில் நிறைய 420 சன்னியாசிகள் உள்ளனர், உண்மையான சன்னியாசிகள் எளிமையாக இருப்பர், இந்தியாவில் உள்ள இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்களின் டிஎன்ஏவும் ஒன்றுதான்" என்றார்.