விடுதலை போராட்ட வீர்ர் தீரன் சின்னமலையின் 216வது நினைவுநாளை முன்னிட்டு, அவரின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார். எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன் ஆகியோர் மரியாதை செலுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 216 வது நினைவு நாளினையொட்டி அவரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சற்றுமுன் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 216 வது நினைவு நாளினையொட்டி அவரின் திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்... pic.twitter.com/eo1c1OziiU
— Subramanian.Ma (@Subramanian_ma) August 3, 2021

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்துள்ள ஓடாநிலையில் உள்ள மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,கொரோனா பரவல் காரணமாக அரசு விதித்த விதிமுறைகளை பின்பற்றி அரசு மரியாதையை செலுத்தப்பட்டதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “ஆங்கிலேயே அரசுக்கு எதிராக போரிட்டு , வெற்றிகள் பலகண்டு, அவர்களுக்கு ஓர் சிம்மசொப்பனமாக திகழ்ந்து, இம்மண்ணின் விடுதலை போரில் தன்னை தியாகம் செய்த வீரத்தின் அடையாளம் இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

ஆங்கிலேயே அரசுக்கு எதிராக போரிட்டு , வெற்றிகள் பலகண்டு, அவர்களுக்கு ஓர் சிம்மசொப்பனமாக திகழ்ந்து, இம்மண்ணின் விடுதலை போரில் தன்னை தியாகம் செய்த வீரத்தின் அடையாளம் இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன். pic.twitter.com/bBTzzJLQFH
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 3, 2021

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், “இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத மாவீரராக திகழ்ந்து, ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய மன்னர் தீரன் சின்னமலை அவர்கள் இந்த தேசத்திற்காக தன் இன்னுயிரை ஈந்த நாள் இன்று! சுதந்திர வேட்கை கொண்டிருந்ததோடு மட்டுமின்றி, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி நடத்திய நாயகரான தீரன் சின்னமலையின் பெருமைகளை எந்நாளும் போற்றிடுவோம்” என தெரிவித்திருக்கிறார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத மாவீரராக திகழ்ந்து, ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய மன்னர் தீரன் சின்னமலை அவர்கள் இந்த தேசத்திற்காக தன் இன்னுயிரை ஈந்த நாள் இன்று! 1/2
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 3, 2021