இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள்: கமல்ஹாசன் பேச்சு!

இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள்: கமல்ஹாசன் பேச்சு!
இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள்: கமல்ஹாசன் பேச்சு!
Published on

தமிழ்நாட்டில் இலவசங்களை கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள் என்று தனது பிறந்தநாள் விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது சொந்த ஊரான பரமக்குடியில் அவர் தனது தந்தையின் சிலையை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “நான் என்ன படித்துள்ளேன் என்பதைவிட எனது திறனைக் கொண்டு பேசி வருகின்றேன். என் குடும்பத்தில் நான் அரசியலுக்குச் செல்வதை யாரும் விரும்பவில்லை. எனது குடும்பத்தில் ஒரே ஒரு மனிதர் தான் அரசியலுக்கு போக வேண்டும் என நினைத்தார். அவர் நினைத்தது இன்று நடந்துள்ளது. 


தமிழ்நாட்டில் தற்போது பள்ளி கல்வியை முடித்தவர்கள், உயர்கல்வி தொடங்க முடியாத நிலை உள்ளது. அதுபோன்ற கமலஹாசன்களுக்காக, திறன் மேம்பாட்டு பயிலகம் இங்கு துவங்கப்படுகிறது. இந்தப் பயிலகம் விரைவில் மற்றப் பகுதிகளிலும் துவங்கப்படும். இது கிராமங்களின் வளர்ச்சிக்குப் பயன்படும். நான் சலூன் கடையில் ஒன்றரை மாதம் பணியாற்றியது, வாழ்வில் எனது முன்னேற்றத்திற்குத் தேவையான அனுபவங்களை கொடுத்தது. நாட்டில் நன்றாக படித்தவர்கள் துப்புரவு பணியாளருக்கு விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. 

பெரிய நகரங்களில் முடி திருத்துபவர்களுக்கு ஒரு லட்சம் வரை ஊதியம் கிடைக்கிறது. எந்த தொழிலாக இருந்தாலும் செய்ய வேண்டும். இங்கு இலவசங்களைக் கொடுத்து கெடுத்துவிட்டார்கள். இலவசமாக வழங்கும் கிரைண்டர்களை பழுது பார்க்க, வெளிநாடுகளிலிருந்தா ஆட்கள் வர வேண்டும்?. ராணுவத்திற்கு தனது பிள்ளைகளை அனுப்பினால், போரில் இறந்துவிடுவான் என கூறுவார்கள். ஆனால் தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளில் ராணுவத்தில் இறப்பவர்களைவிட அதிகமாக இறந்து வருகின்றனர். 


எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேசும் போது, ’கமல் நம்மவர் இல்லை, உங்களவர்’ என கூறினர். அதனை நான் சொல்ல வேண்டுமென நினைத்த நிலையில் அவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அது உண்மைதான், நான் உங்கள் நான்தான், எனது குடும்ப உறுப்பினர்கள் குறைந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் மூலம் அதிகமாகவே கிடைத்துள்ளனர். 

எனக்கு 5 வயது இருந்த போது எனது அண்ணி பரமக்குடியில் எடுத்த பிறந்தநாள் விழா, என் மனதில் என்றும் இருக்கும், எத்தனையோ பிறந்தநாள் விழாக்களை, வெளிநாடுகளில் நான் கொண்டாடினாலும் மனநிறைவு இருந்ததில்லை, அது இன்று நடைபெற்ற இந்த விழா மூலம் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com