திருப்பூர்: ஆட்சியர் பெயரிலேயே போலி சமூகவலைதள கணக்கை துவங்கி பணம் கேட்ட மோசடி கும்பல்

திருப்பூர்: ஆட்சியர் பெயரிலேயே போலி சமூகவலைதள கணக்கை துவங்கி பணம் கேட்ட மோசடி கும்பல்
திருப்பூர்: ஆட்சியர் பெயரிலேயே போலி சமூகவலைதள கணக்கை துவங்கி பணம் கேட்ட மோசடி கும்பல்
Published on

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை துவங்கி , பணம் கேட்டு மெசேஜ் அனுப்பிய மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் விஜயகார்த்திகேயன். சமூக வலைத்தளங்களான பேஸ்புக் , ட்விட்டர் போன்றவைகளில் இவரின் செயல்பாடுகள் அதிகமாகவே இருக்கும். அதனால் இயல்பாகவே இவரின் சமூக வலைத்தள கணக்கை பாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் , இவரின் உண்மையான பேஸ்புக் தளத்தை போலவே , பெயர் , போட்டோக்களை வைத்து போலி கணக்கை துவங்கி சில நபர்களுக்கு மெசேஜ் மூலமாக பணம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த நபர்கள் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 

உடனடியாக போலி கணக்கு தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் , பேஸ்புக் தளத்திற்கும் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் , தன்னுடைய பெயரில் வரும் இதுபோன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

- கவியரசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com