'கேஷ் பேக்' என கூறி நூதன முறையில் மோசடி !

'கேஷ் பேக்' என கூறி நூதன முறையில் மோசடி !
'கேஷ் பேக்' என கூறி நூதன முறையில் மோசடி !
Published on

திருவாரூரில் செல்போன் கடை உரிமையாளரிடம் நூதன முறையில் பண மோசடி செய்த கோவையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளர். 

திருவாரூர் தெற்கு வீதியில் மெஜஸ்டிக் மொபைல்ஸ் எனும் செல்போன் கடை நடத்தி வருபவர் அக்பர் அலி. இவரிடம் செல்போன் வாங்குபவர்களிடம் 15 சதவிகித பணத்தை கூடுதலாக பெற்று அதன்பிறகு கேஷ்பேக் எனப்படும் சலுகையை வழங்கி வந்துள்ளார். அதாவது ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் வாங்கினால் 1,150 ரூபாய் செலுத்த வேண்டும்.

90 நாட்கள் கழிந்ததும் மொபைலின் விலையான ஆயிரம் ரூபாயும் வாடிக்கையாளருக்கு திருப்பி வழங்கப்படும் என்பதே இந்த சலுகையின் சாராம்சம். இந்த முறையில் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்று தனக்கு அளிக்குமாறும், அவ்வாறு தரும் பணத்தை 100 சதவிகிதமாக 90 நாட்களில் திருப்பி தருவதாக கோவையை சேர்ந்த அஜந்தா இ வேர்ல்டு எனும் நிறுவனத்தின் உரிமையாளர் பிரகலாதன் கூறியுள்ளார்.  

இதனை நம்பிய அக்பர் அலி கடந்த ஆண்டு கேஷ்பேக் சலுகை மூலம் மொபைல் விற்ற பணம் 13.75 லட்சம் ரூபாய் பணத்தை பிரகலாதனிடம் வழங்கியுள்ளார். 6 மாதங்களாகியும் கூறியபடி 100 சதவிகித பணத்தை திரும்ப வழங்காமல் பிரகாலாதன் ஏமாற்றி வந்துள்ளார். அக்பர் அலி புகார் அளித்ததன் பேரில் பிரகலாதனை திருவாரூர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com