தமிழ்நாடு
கல்வி உதவித்தொகை பெயரில் மோசடி: QR code ஸ்கேன் செய்ய வேண்டாமென காவல்துறை எச்சரிக்கை
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பதாகக் கூறி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
தமிழக அரசு சார்பில் கல்வி உதவித்தொகை அளிக்கப்படுவதாகக் கூறி மோசடி கும்பல் ஒன்று பள்ளி மாணவர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளது. இதை நம்பி QR code ஸ்கேன் செய்தவர்கள் பலர் தங்களது பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் கோவை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் 5 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து 44 செல்போன்கள், 22 சிம் கார்டுகள் ஏடிஎம் கார்டுகள் காசோலை புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.