வேலை வாங்கி தருவதாக மோசடி: செந்தில்பாலாஜி உள்ளிட்ட 47 பேர் மீது குற்றப்பத்திரிகை

வேலை வாங்கி தருவதாக மோசடி: செந்தில்பாலாஜி உள்ளிட்ட 47 பேர் மீது குற்றப்பத்திரிகை
வேலை வாங்கி தருவதாக மோசடி: செந்தில்பாலாஜி உள்ளிட்ட 47 பேர் மீது குற்றப்பத்திரிகை
Published on

பணம் பெற்றுக்கொண்டு போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தந்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சரும், கருர் தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில்பாலாஜி உள்ளிட்ட 47 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

2011-15ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயரை கூறி, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி வருவதாக, ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்யப்பட்டதாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம்  புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நால்வர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கு சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், மத்திய குற்றப்பிரிவினர் புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, சென்னை மாநகர் போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற நிர்வாக இயக்குனர் டி.ஆல்பிரட் தினகரன், இணை நிர்வாக இயக்குனர் வி.வரதராஜன், உள்ளிட்ட 47 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com