புதுச்சேரி: கோயில் திருவிழாவில் வெடி விபத்து - 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் காயம்

புதுச்சேரி: கோயில் திருவிழாவில் வெடி விபத்து - 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் காயம்
புதுச்சேரி: கோயில் திருவிழாவில் வெடி விபத்து - 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் காயம்
Published on

புதுச்சேரி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

புதுச்சேரி எல்லையருகே உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன இருசாம்பாளையம் கிராமத்தில், அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. அப்போது தீப்பந்தங்களை கொண்டு விளையாடியபோது, அதன் தீப்பொறி அருகில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டையில் பட்டது. இதில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.



இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி திருவிழாவிற்கு வந்த லெட்சுமிநாராயணன், மாதவன், அர்ஜூனன் ஆகிய மூன்று சிறுவர்களும், சரத் என்ற இளைஞரும் காயமடைந்தனர். இதனையடுத்து நான்கு பேருக்கும் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இவர்கள் மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து குறித்து கடலூர் ரெட்டிச்சாவடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com