பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது; பின்னணி என்ன? முழு விவரம்

தனது பண்ணை வீட்டிற்கு சென்று அங்குள்ள காவலாளியை மிரட்டி தாக்கியதுடன் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கேளம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்முகநூல்
Published on

செய்தியாளர்: அன்பரசன்

கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வு பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விழுப்புரம் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அதை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விழுப்புரம் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்ததுடன் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்PT

இதனையடுத்து ராஜேஷ் தாஸ் தன்மீதான தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராஜேஷ்தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தற்போதுவரை நிலுவையில் உள்ளது.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
தருமபுரி: கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்து – முதியவர்கள் மூன்று பேர் உயிரிழப்பு

இதனிடையே முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான பீலா ராஜேஷ், தான் தன் கணவரை பிரிந்து விட்டதாகவும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். மேலும், அவர் தனது பெயரை பீலா வெங்கடேஷ் என பெயர் மாற்றம் செய்து அரசு இதழில் வெளியிட்டார்.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
இனி ‘பீலா ராஜேஷ்’ அல்ல; ‘பீலா வெங்கடேசன்’

தற்போது, ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் தனது கணவரை பிரிந்து கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வருகின்றார்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ் தாஸ் தையூரில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசனின் பண்ணை வீட்டிற்கு சென்று அங்குள்ள காவலாளியை மிரட்டி தாக்கியதுடன் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் இது குறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் கேளம்பாக்கம் போலீசார் ராஜேஷ் தாஸ் மீது சட்டவிரோதமாக கூடுதல், கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன் அடிப்படையில், ராஜேஷ் தாஸை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று காலை கேளம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இது குறித்து விசாரணை அவரிடம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
தருமபுரி: தங்களை ஏற்றிய ஏணியை எட்டி உதைத்த மகன்கள்... ஆதரவின்றி நிழற்கூடத்தில் அவதியுறும் தாய்!

ஏற்கனவே பெண் எஸ்.பி.,க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவியான ஐ.ஏ.எஸ் அதிகாரியான பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ள சம்பவமானது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை செயலாளரான பீலா வெங்கடேசனின் நிர்பந்தத்தின் பேரில்தான் தனது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது எனக்கூறி, மின்சார வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜேஷ் தாஸ் மின்வாரியத்தில் சில தினங்களுக்கு முன்னர் புகார் மனு அளித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com