அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் கே.சி.பழனிசாமி அவரது இணையதளம் மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக முத்துகவுண்டன்புதூர் ஊராட்சித் தலைவர் கந்தவேல் அளித்த புகாரின் பேரில், இன்று காலை அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், பொய்யான ஆவணம் உருவாக்கி ஏமாற்றுதல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீண்ட நேர விசாரணைக்குப் பின்னர் அவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமிக்கு பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவிட்டது.