“அரசியல் ஆசை யாரையும் விட்டு வைத்ததில்லை; ஆனால்...” - ஜானகி ராமச்சந்திரன் குறித்து கே.பி.முனுசாமி

“இயற்கையாக சிந்திக்க கூடியவர்கள், நேர்மையாக நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள். ஜானகி அம்மாள் அளவிற்கு அறிவுரை சொல்ல நான் தியாகி அல்ல, நான் சுயநலம் கலந்த ஒரு அரசியல்வாதி” என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
கே.பி.முனுசாமி, ஜானகி ராமச்சந்திரன்
கே.பி.முனுசாமி, ஜானகி ராமச்சந்திரன்pt desk
Published on

சென்னையில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மனைவியும் முன்னாள் முதல்வருமான ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசிபோது....

mgr Janaki
mgr Janakipt desk

“எம்ஜிஆரை பாதுகாத்து இந்த சமூகத்திற்கு கொடுத்தவர் ஜானகி அம்மையார். அரசியலில் காலடி எடுத்து வைத்த பின்பு அரசியல் ஆசை என்பது யாரையும் விட்டு வைத்ததில்லை, அடுத்தடுத்து போராடி இலக்கை அடையதான் ஒவ்வொரு அரசியல்வாதியும் போராடுவார்கள். ஆனால், முதலமைச்சர் பதவி கிடைத்தாலும் ‘இந்த இயக்கம் சுயநலனத்தின் அடிப்படையில் அடிபட்டு விடக் கூடாது’ என்று தொலைநோக்கு சிந்தனையுடன் முடிவை எடுத்தவர் ஜானகி அம்மாள்.

கே.பி.முனுசாமி, ஜானகி ராமச்சந்திரன்
கர்நாடகா: தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி - 25 ஆண்டுக்கு பின் ஷிகாவி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

மனம் உவந்து இந்த இயக்கத்தை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார். ஜானகி அம்மாள் அளவிற்கு அறிவுரை சொல்ல நான் தியாகி அல்ல. நான் சுயநலம் கலந்த ஒரு அரசியல்வாதி. அவர் சொன்ன கருத்தை மட்டுமே நான் வெளிப்படுத்துவேன். அவர் சொல்லும் படி நடந்து கொள்ளுங்கள் என்று யாருக்கும் சொல்ல முடியாது. இயற்கையாக சிந்திக்கக் கூடியவர்கள் நேர்மையாக நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள்.

EPS
EPSptweb

எடப்பாடி பழனிசாமி அப்பொழுதே சரியான பாதையில் பயணித்ததால்தான் தற்பொழுது இக்கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார். ஒருங்கிணைந்த இயக்கமாக இருக்கும் காரணமாகதான் ஜானகி அம்மாளுக்கு நூற்றாண்டு விழா எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com