கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தை மையமாகக்கொண்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதற்கென துணைவேந்தரும் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் கல்லூரி செயல்பாடுகள் எதுவும் நடைபெறாத நிலையில், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் விழுப்புரம் - கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை இணைத்து, சிதம்பரம் பல்கலைக்கழகத்தின் கீழ் இந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இனி தொடர்ந்து செயல்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.