“அதிமுக கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் பேசலாம்; ஆனால்...” - செங்கோட்டையன் பேச்சு

“அதிமுக கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் பேசுலாம் கருத்து கூறலாம். ஆனால், திமுக கூட்டத்தில் ஆ.ராசாவை தவிர எவரும் பேசமுடியாது” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
கே.ஏ.செங்கோட்டையன்
கே.ஏ.செங்கோட்டையன்pt desk
Published on

செய்தியாளர்: D.சாம்ராஜ்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உக்கரம் கிராமத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.

கே.ஏ.செங்கோட்டையன்
கே.ஏ.செங்கோட்டையன்

அப்போது அவர், “அதிமுக கூட்டத்தில் எல்லோரும் பேசலாம். ஏழை, எளியோர் பேச வாய்ப்புள்ளது. ஆனால், திமுகவில் ஆ.ராசா மட்டுமே பேசுவார். சட்டையைப் பிடித்து இழுத்துவிடுவார். இங்கு அப்படி இல்லை. யார் வேண்டுமானாலும் பேசலாம். அதுதான் அதிமுக.

கே.ஏ.செங்கோட்டையன்
திருப்பதி லட்டு|“கார்த்தி அப்படி என்ன தவறாக பேசிட்டாரு”- பவன் கல்யாண் ஏன் இப்படி அரசியல் செய்கிறார்?

2026-ல் யாராலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. சிலர் ‘நாற்பதை பிடித்து விட்டோம். இனி 200-ஐ பிடிக்க போகிறோம்’ என்று சொல்லலாம், ஆனால், நிலைமை மாறியிருக்கிறது. அதிமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது. திமுக தத்தளிக்கிறது” என்று பேசினார். இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com