வனச்சரக அலுவலர் தற்கொலை: குரூப்-2 தோல்வி காரணமா..?

வனச்சரக அலுவலர் தற்கொலை: குரூப்-2 தோல்வி காரணமா..?
வனச்சரக அலுவலர் தற்கொலை: குரூப்-2 தோல்வி காரணமா..?
Published on

குரூப் 2 தேர்வில் தோல்வியுற்றதை அடுத்து உதவி வனச்சரக அலுவலர் ஆக பயிற்சி பெற்றுவரும் மாணவர், வனவியல் கல்லூரியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

மதுரையைச் சேர்ந்த விஜய நாராயணன் என்பவர் வனத்துறை தேர்வில் வெற்றி பெற்று, தேனி அருகே உள்ள அரசு வனவியல் கல்லூரியில் உதவி வனச்சரக அலுவலராக பயிற்சி பெற்று வருகிறார். சிறுவயது முதலே உயர்ந்த அரசுப் பதவியில் பணிபுரிய வேண்டும் என்பதற்காக விஜய நாராயணன் பல்வேறு வகையான குரூப் தேர்வுகளை எழுதி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப்-2 தேர்வையும் எழுதி உள்ளார்.

தான் தேர்வில் வெற்றி பெற்று மிகப் பெரிய அரசு அதிகாரியாக வருவேன் என தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்த நிலையில் நேற்று குரூப் 2 தேர்வுகள் முடிவுகள் வெளியாகின. இந்தத் தேர்வு முடிவில் விஜய நாராயணன் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜய நாராயணன் இன்று அதிகாலை வைகை அணையில் உள்ள அரசு வனவியல் கல்லூரி விடுதியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்

இதனைக் கண்ட அங்கு அங்கு பயிற்சிப்பெற்று வந்த வனத்துறை அதிகாரிகள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அவரது உடலை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com