தேனியில் வனத்துறை-விவசாயிகள் இடையே நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் சிலர் செல்போனில் நேரத்தை
வீணடித்ததாக புகார் எழுந்தது.
தேனி மாவட்டத்தில் வனத்துறை மற்றும் விவசாயிகளிடையே ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, வனத்துறையினர்
மற்றும் விவசாயிகள் கலந்து கொள்ளும் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் வனப்பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு அனுமதி வழங்க
வேண்டும் என அதிகாரிகளுடன் காரசாரமாக விவாதித்து கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட வருவாய் துறை அலுவலர் கூட்ட நிகழ்வினை பற்றி ஏதுவும் கவனிக்காமல் தனது முகநூல்
பக்கத்தை பார்ப்பதும், அதற்குப் பதில் அளிப்பதும் எனக் கடைசி வரை மும்முரமாக இருந்தார். தங்களின் உரிமைக்காக கோரிக்கை
வைக்கும் விவசாயிகள் ஒரு பக்கம், விசாயிகளின் பிரச்சனையை உட்கார்ந்து கேட்கும் அதிகாரிகள் மற்றொரு பக்கம் என இரு
தரப்பினரும் அமர்ந்திருக்க, கூட்டத்திற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என வருவாய் அலுவலர் ஒருவர் முகநூலில் மூழ்கி இருந்தது
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.