தமிழ்நாடு
அழகழகான பறவைகள் கூட்டம்.. ரம்மியமாக காட்சியளிக்கும் கோடியக்கரை பறவைகள் சரணாலயம்...
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் முகாமிட்டுள்ள பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை, சுற்றுலா பயணிகள் கண்குளிர பார்த்து ரசித்து செல்கின்றனர்.
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவ காலங்களில் லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வருகை தருவது வழக்கம்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே ஆர்ட்டிக் ரஷ்யா போன்ற குளிர் பிரதேசங்களில் இருந்து 40 வகையான உள்ளான் பறவைகள் பல்லாயிரக்கணக்கிலும், ஈரான் நாட்டிலிருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூநாரை பறவைகளும் வருகை தந்துள்ளன.
இவ்வாறு பல்வேறு வகையான பறவைகள் சரணாலயத்திற்கு படையெடுத்துள்ள போதும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைவு என பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.