நொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை: பொதுமக்கள் புகார்

நொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை: பொதுமக்கள் புகார்

நொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை: பொதுமக்கள் புகார்
Published on

திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீண்டும் நுரையுடன் கூடிய தண்ணீர் செல்வதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மழையை பயன்படுத்தி சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை சாயப்பட்டறைகள் ஆற்றில் திறந்து விடுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஜீரோ டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நீரையே வெளியேற்றவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், இந்தநிலை தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

கடந்த ஒரு வாரமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருவதால் சாயப்பட்டறைகள் சுத்திகரிக்காமல் கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்துவிட்டுள்ளன. அதனால், ஆற்றங்கரையோர மக்கள் தொற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றிய 23 சாயப்பட்டறைகளுக்கு சமீபத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஆற்றில் நுரை மிதக்கத் தொடங்கியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com